Tuesday, April 3, 2012

தென்றல் பேனா ..

நட்சத்திரங்களை
வரவேற்பு அறைக்கு அழைத்தாகி விட்டது ..
அங்கோர் ஒளி விளக்கு மின்னிக்கொண்டு
போதாதென்று நிலா முற்றம்
மலர் தோட்டம் மயக்கத்துடன்
மெல்லிய பஞ்சு மெத்தை
இசை ஒலிக்கு இரு குயில்கள்
கனிய கனிய கனி ரசம்
சிரித்து பேசி மகிழ பழங்கதை கோப்பு
பூரித்து போக புகைப்பட குவியல்
இதழ் எங்கும் தேன் கொண்டு
சுவாச காற்றை உனக்கென சுத்தப்படுத்தி
நெஞ்சம் எங்கும் காதல் சேர்த்து
கனிந்து உருகி இல்லறம் காண காத்திருக்கிறேன் !!!!
உனக்குதான் காதலிக்க நேரம் இல்லை ..... ??
================================================== காதல் ஏற்றி!!!!!! ஆண்டவனிடம் வேண்டுதல் செய் ஆயிரம் விளக்கேற்றுவதாய் அப்போது உன்னவள் கிடைப்பாள் என்று அறியாமையில் சொன்னான் நண்பன்.. அவனுக்குத் தெரியாது உன் விழி ஏற்றிய ஆயிரம் விளக்கில்தான் என் காதல் கை கூடியது என்று.... =================================================== அசைந்தாடும் விளக்கொளியில் மங்கலாய் ஓவியம் செய்யும் உன் நிழலுக்கு ஓர் முத்தம் அலையோடு விளையாடி உன் கொலுசோடு ஒட்டிக் கொள்ளும் மணல்த் துகள்களுக்கு ஓர் முத்தம் கடமை செய்கிற பொது உன் அகன்ற நெற்றியில் பனித் துளியாய் பூக்கும் வியர்வைக்கு ஓர் முத்தம் என் காயங்களுக்காய் மழைச் சாரல் வீசுவதாய் கண்ணீர் சிந்திய உன் விழிகளுக்கு ஓர் முத்தம் வலிக்க வலிக்க பக்கம் பக்கமாய் கவிதைகளும் கடிதங்களும் எழுதி நீட்டிய உன் தளிர் கரங்களுக்கு ஓர் முத்தம் அருவியில் குளித்தாடி குழைந்தயாய் மாறும் உன் பொன்மேனி மீது பூக்கும் நீர்த் திவலைகளுக்கு ஓர் முத்தம் யாரென்று பார்க்கும் ஆர்வத்துடன் கதவு திறக்கும் உன்னை திகைப்பூட்ட ஓர் சிறு முத்தம் அயர்ந்து போனாலும் அழகாய்த் தூங்கும் உன் விழிகளுக்கு ஓர் முத்தம் நீ பேசும் போது உன் செண்பக விரல்களுக்கு ஓர் முத்தம் நீ கனவுகளில் உலா வரும் போது ரசனையுடன் ஓர் முத்தம் ஊரில் நீ இல்லாத தருணங்களில் தப்பித் தவறிக்கூட உன் நினைவின்றி இருக்கக் கூடாது என்பதற்காக உன் நிழற்படத்திற்கு என் நிஜமான ஓர் முத்தம்

No comments:

Post a Comment